சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்த இளைஞனுக்கு 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இளைஞன் இன்று பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.
தருஷ சந்தருவான் கொடிகார என்ற இளைஞனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்
சிறுமி ஒருவர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்திய வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, தாக்குதல் நடாத்திய குகுல் சமிந்த என்ற சந்தேகநபர் பொலிஸாரினால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சந்தேகநபரான குகுல் சமிந்த என்ற சந்தேகநபர், சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்த இளைனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்