கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்த அதிபர் ஆசிரியர் பாடசாலையில் கல்வி நடவடிக்கை முடிவடைந்ததும் இன்று புதன்கிழமை (12) பிற்பகல் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியாவிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன,
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராக எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு பிரதான நகரில் பேரணியாக சென்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நானுஓயா நிருபர்