ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைககள் : உதவி கோரும் பெற்றோர்கள்

0
201

ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பராமரிக்கவும், அவர்கள் உடல்களை பிரிக்கவும் அரநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் உதவிகேட்டுள்ளனர்.

அரநாயக்க, உடகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது மூன்று வயதாகின்றது.

பிறந்ததிலிருந்தே இடுப்பு பகுதியில் ஒட்டிப் பிறந்துள்ள இவர்களைப் பராமரிக்கவும், சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இப்பெற்றோருக்கு போதிய வருமானமில்லையென தெரிவிக்கின்றனர்.

இரண்டு குழந்தைகளின் இந்த நிலைமையால், பெற்றோர் தற்போது மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் உள்ளனர்.

சிறுமிகளின் 4 வயதுக்கு முன்பே உடலைப் பிரிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில், அதற்கான வைத்தியரை கண்டுபிடிப்பது கூட அவர்களுக்கு கனவாகவே மாறிவிட்டது. இந்த அப்பாவி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினால், அது மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here