தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படும் போது பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகள் மாத்திரமன்றி 30 வீத புள்ளிகள் 04 – -05ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாக வைத்தே வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
அதனை முறையாக மதிப்பீடு செய்வது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதுடன் பாடசாலை சபை மூலம் அவை கண்காணிப்பு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின்போது 01,06,10 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கி முன்னோடித் திட்டம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.