ஒருநாள் இரவு பொழுதை காட்டில் கழித்த மூன்றரை வயது சிறுவன்: நோர்வூட் பகுதியில் பரபரபரப்பு

0
1215
விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சம்பவமொன்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து கண்டு பிடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லக்ஸபான தோட்டத்தை சேர்ந்த நான்கு வயதுடைய சிறுவனே டங்கல் காட்டுப்பகுதியில் இருந்து இன்று (18)காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று (17) மாலை சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில் பதற்றமடைந்த ஊர்மக்கள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததுடன் இரவு முழுவதும்தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
டங்கல் மேற் பிரிவில் திருமண நிகழ்வொன்றிக்கு லக்ஸபான தோட்டத்திலிருந்து வந்த உறவினர்களின் பிள்ளையான சிவதாஸ் அபிசான் என்ற நான்கு வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.
இந் நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் வனபாதுகாப்பு துறையினரால் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ டி.வி காணொளியில் சிறுவன் ஒருவன் காட்டுப்பகுதியில் நடந்து செல்வது பதிவாகியிருந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த சிறுவனை கண்டுபிடித்துள்னர்.
மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்குட்படுத்த டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சிறுவன் கானாமல் போனமை யாராயின் திட்டமிட்ட செயல்பாடா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here