இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் இன்று பொரளை கனத்தை மயானத்துக்கு அருகில் இடம்பெற்றது.
இதேபகுதியில்தான் தமிழர்களின் கடைகளுக்கு 24-07-1983 இரவு தீ வைக்கப்பட்டது. அன்று முதல் ஒரு வாரம் தென்பகுதியில் தமிழர்களின் உயிர்கள் உடமைகள் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்க அழிக்கப்பட்டன.
இதனை சிங்கள மக்களின் உணர்வுகள் என ஜனாதிபதி ஜயவர்த்தன அப்போது சொன்னார். அதனால்தான் அதனை அரசு தடுக்கவில்லை என்பது அவரது கருத்து, இப்போது சிங்கள மக்களே அதனை நினைவுகூர்கின்றார்கள்.