பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டம் இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் 08பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை வியாழக்கிழமை காலை 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரம் ஒன்றிலிருந்த குளவி கூட்டு பருந்து ஒன்று வந்து கொத்தியமையால் குளவி கலைந்து இந்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் காயங்களுக்கு உள்ளான 8பெண் தொழிலாளர்களுள் 06பர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எகே.ஜெயசூரிய தெரிவித்தார்.
எஸ் சதீஸ்