BREAKING NEWS கல்முனைப் போராட்டம் 92 வது நாளில் புது வடிவம் பெற்றது ! செயலகத்தை மூடி ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டம்

0
110
கல்முனையில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் போராட்டம் இன்று (24) திங்கட்கிழமை 92 வது நாளில் புது வடிவம் பெற்றுள்ளது. பிரதேச
செயலகத்தை மூடி பொது மக்கள் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 91 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர்.
92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்துள்ளனர்.
அரச அரச அதிகாரிகளே எமது நியாயமான கோரிக்கைக்கு பதில்என்ன? எனும் விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் தொடர்கிறது.
(வி.ரி.சகாதேவராஜா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here