தலைமை விஞ்ஞானி நவநீதன் சந்தானத்தை சந்தித்தார் அமைச்சர் ஜீவன்

0
182

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான். ஸ்மார்ட் டெர்ரா நிறுவன தலைமை விஞ்ஞானி நவநீதன் சந்தானத்தை சந்தித்து கலந்துரையாடினார்.

சீனாவின் டேலியன் நகரில் இடம்பெற்றுவரும் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஸ்மார்ட் டெர்ரா(Smart Terra) நிறுவன தலைமை விஞ்ஞானி நவநீதன் சந்தானம் அவர்களுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.

அவரது தொடக்க நிறுவனமான ஸ்மார்ட் டெர்ரா Smart Terra செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குழாய் வலையமைப்பில் உள்ள கசிவுகள் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் வருமான இடைவெளிகளைக் கண்டறிய உதவுகிறது.

இந்த புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம், இலங்கையில் உள்ள தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை(NWSDB) மற்றும் இலங்கையில் காணப்படும் ஏனைய நீர் வழங்குனர்களின் நிதி நிலையை மேம்படுத்தும் அதே வேளையில், வாடிக்கையாளர்களின் நீர் கட்டணங்கள் மற்றும் நீர் விரயங்களை குறைக்கவும் முடியும்.

குறிப்பாக நீர் கசிவு குழாய்களின் பயண்பாட்டால் துரதிருஷ்டவசமாக வாடிக்கையாளர்களால் மேலதிகமான பணம் செலுத்துவதற்கான வாய்புகள் காணப்படுவதால் அதனை நிவர்த்தி செம்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here