ஆசிய யோகாசன தின போட்டியில் பாட்டியும் பேரனும் சாதனை

0
230

10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிவவிஷ்ணு யோகாபீடம், இலங்கை, இந்திய தேசிய யோகாசான சம்மேளனம் மற்றும் சர்வதேச யோகாசன பேரவை, சர்வதேச விளையாட்டு மற்றும் யோகா பேரவை ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கு அண்மையில் செய்யப்பட்டு கடந்த 30.06.2024 அன்று கொழும்பில் நடைபெற்ற முதலாவது ஆசிய யோகாசன போட்டி – 2024 (1st Asian Yoga Championship Competition – Sri lanka 2024) யில் மலையகத்தைச் சேர்ந்த திருமதி. தவமணி தேவராஜா 51 முதல் 60 வயதிற்குட்பட்ட பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் தரவளை மேற்பிரிவில் பிறந்து தற்போது டிறேட்டன், கொட்டகலையில் வசித்து வருகிறார். இவர் தாமாகவே சுயகற்றல் மூலம் யோகாசனம் பயின்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி போட்டியில் 04 முதல் 05 வயதிற்குற்பட்ட பிரிவில் போட்டியிட்ட இவரது பேரன் குணசீலன் கிரண்கேசவ் மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா பாடசாலை சார்பாக போட்டியிட்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த பாட்டியும் பேரனும் இணைந்து எமது மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

ஆசியநாடுகள் பலவற்றின் யோகாசன அமைப்புக்கள் போட்டியிட்ட மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here