ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு எதிராக எந்தச் செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முப்படையினரும் இணைந்து போரை முன்னெடுத்த போது, ஜப்பானிய அரசாங்கத்திடம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எமக்கு எந்தவித உதவிகளையும் புரிய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பதானது எமது நாட்டுக்குத் துரோகம் செய்யும் செயல் இல்லையா?.
ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு எதிராக எந்தச் செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம் அல்லவா?.
ராஜபக்சக்களுடன் கீழ்த்தரமான அரசியல் ஒப்பந்தங்கள் மற்றும் தந்திரமான தந்திரோபாயங்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க, தனது அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்கு நாட்டிற்கு எதிராக எந்த துரோகச் செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் சக்தியோ, மக்களின் பிரதிபலிப்போ இல்லாத ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிலங்காவின் அரச தலைவராக செயற்பட எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்பதை மக்கள் ஏகமனதாக கூற வேண்டும் என்றார் அவர்.