நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் – அமைச்சர் மனுஷ

0
144

இஸ்ரேலுக்கு முதல்கட்டமாக அனுப்பிய பணிக் குழுக்களின் நெருக்கடிகள் காரணமாக, இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கையில் போன்று எம்மவர்களின் சிலர் அங்கு போராட்டம் நடத்தியதால் இவ்விளைவு ஏட்பட்டது எனவே இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கருப்புபட்டியலில் இணைக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச்  செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் மாற்றட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை (9)  நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதல்கட்டமாக இஸ்ரேலுக்கு அனுப்பிய பணிக் குழுக்களின் நெருக்கடிகள் காரணமாக,  இலங்கையில் போன்று எம்மவர்களின் சிலர் அங்கு போராட்டம் நடத்தியதால் இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே நாம் தொடர்ந்தும் இஸ்ரேலிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் எங்களுக்கு மீண்டும் விவசாயத் துறையில் பணியாளர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியானது.

நாளை இஸ்ரேலில் விவசாயத்துறையில் பண்ணிக்காக செல்லும் 43 குழுவினர் சிறந்த முறையில் பணியாற்றுவதன் மூலம் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பு நிமிர்த்தம் செல்லக் காத்திருக்கும் 8000 பேருக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி ஹோட்டல் பிரிவுக்கு திறமையான தொழிலாளர்களாக அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அவை தொடர்பான ஒப்பந்தங்கள் கூட பெறப்பட்டுள்ளன வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கருப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்”

ஏனைய நாடுகளினுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவே ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது மாத்திரமே எஞ்சியுள்ளது இவ்வாறான வேலைத்திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள் தாய்நாட்டிற்கு வருகின்ற நற்செய்தியை விரும்புவதில்லை.

நாட்டிட்ற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முதல் தவனை கடன் பெறப்பட்டதும், 40 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. தற்போது கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்துள்ளது , சர்வதேச தரவரிசையில் இலங்கை பொருளாதாரத்தில் முன்னோக்கி நகரும் நிலையில் 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டி வேலைநிறுத்தங்கள் இடம்பெற்றுவருகின்றன. யார் வேலைநிறுத்தம் செய்தாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியாக அதிகாரிகள் இன்றும் பணிபுரிகின்றனர்.

அவர்கள் எமது மரியாதைக்கு உரியவர்கள். அரசத்துறையில் உள்ள பதினைந்து லட்சத்து பணியாளர்களுக்கும் 25,000 ரூபாய் சம்பளத்தை அதிகரித்தால் மேலும் 400 பில்லியன் பணம் திறைசேரிக்கு தேவைப்படும் தற்போதைய சூழலில் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது அவ்வாறாயின் மீண்டும் வரியை அதிகரிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடவே இம் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது . அநுரகுமார மற்றும் டில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி தான் இவற்றைச் செய்து வருகின்றது என்பது இரகசியமல்ல. வேலை வாய்ப்பை இல்லாதொழித்து, பாடசாலைகளை மூடுவதன் மூலம் மீண்டும் 87-89 காலப்பகுதி போன்ற அராஜக நிலைமையை ஏற்படுத்தி இளம் மாணவர்களை வீதிக்குக் கொண்டு வந்து, அவர்களின் அரசியல் இலக்குகளை நிறைவேற்றுவது அவர்களது திட்டம் என அமைச்சர் தெரிவித்தார்.

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here