நுவரெலியா பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட லேடிமெக்லம் டிரைவ் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலத்தை நுவரெலியா பொலிஸார் (22) பகல் மீட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டவர் இலக்கம் 45 பனாபிட்டிய கரன்தெனிய பகுதியை சேர்ந்த மொஹமட் பாயிஸ் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் விடுதியில் சடலமாக மீட்க்கப்பட்ட இவர் கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியாவுக்கு வருகை தந்து கூட்டுறவு சங்க விடுதியில் (21) ஞாயிற்று கிழமை காலை வரை தங்குவதற்கு அறை ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியுள்ளார்.
அதேசமயம் குறித்த நபர் நுவரெலியா நகரில் ஹோட்டல் ஒன்றில் உணவு உண்ட பின் தான் தங்கயிறுக்க வாடகைக்கு பெற்ற விடுதியின் அறைக்கு வந்து விடுதியின் சக ஊழியர்களுடன் பேசிவிட்டு அறைக்கு சென்றுள்ளார்.
ஆனால் மறுநாள் சனிக்கிழமை இவர் அறையை விட்டு வெளியே வரவில்லை.அதேபோல ஞாயிற்று கிழமையும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
இந்த நிலையில் (22) திங்கட் கிழமை காலை விடுதி ஊழியர் ஒருவர் குறித்த நபர் தங்கியிறுந்த ஆறையின் வெளிப்புற ஜன்னல் வழியில் அறையை உள்நோக்கி பார்த்த போது குறித்த நபர் கட்டில் ஒன்றின் ஓரத்தில் வீழ்ந்து கிடந்துள்ளதை அவதானித்துள்ளார்.
பின் இது தொடர்பாக விடுதி முகாமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன் நுவரெலியா பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விடுதிக்கு விரைந்த பொலிஸார் தாப்பாலிட்டு மூடியிறுந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்ட பின் 1990 அவசர சேவைக்கு அறிவித்துள்ளனர்.
இதன்போது உடனடியாக விரைந்து வந்த 1990 அவசர சேவை நோயாளர் காவு வண்ட்டியில் வருகை தந்த மருத்துவர்கள் குறித்த நபரை பரிசோதித்துள்ளனர்.
இதன்போது தரையில் வீழ்ந்து கடந்துள்ள நபர் உயிழந்துள்ளார் என உறுதித்தித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பின் சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் இரசாயன தடையவியல் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்த நபரின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை செய்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் உயிரிழந்த நபர் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட்டு வருகின்றன நிலையில் சடலம் சட்ட வைத்தியரின் உடல் கூற்று பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்