பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் இணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 6 பேரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். .
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், எரங்க குணதிலக்க மற்றும் ஜீவந்த பீரிஸ் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் ரவீது சேனாரத்ன என அழைக்கப்படும் ‘ரட்ட’, ரத்கரவே ஜினரதன தேரர், நடிகர் ஜகத் மனுவர்ண, ஜோஹான் அப்புஹாமி உள்ளிட்ட 9 பேர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.