ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாபெரும் வெற்றிக்கு எம்மை அர்ப்பணிக்கின்றோம்

0
97

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாபெரும் வெற்றிக்கு எம்மை அர்ப்பணிக்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளதுடன் மத்திய அரசு, 9 மாகாண அரசுகள் உள்ளடங்களாக 10 அரசுகளின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவேன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்ட லில் நேற்று நடத்திய சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

‘நாட்டில் வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தைப் பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீற முடியாது. தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு.’ – என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘எனக்காக இங்கு வந்து என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் 2022 ஜூலை மாதத்தில் வீடுகளை இழந்தோம். இந்த நாட்டுக்கு எதிர்காலம் இருக்காது என்றே மக்களும் நினைத்தனர்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்று பலரும் நினைத்தனர். ஏன் இந்த அரசைப் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்டனர். இந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று சொன்னேன். மொட்டுக் கட்சிக்கு அதற்கான அனுபவம் உள்ளதா என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

இருப்பவர்களை வைத்து வேலை செய்வதே சிறந்தது. மாறாக புதியவர்களை வடிவ மைக்க எமக்கு நேரம் இருக்கவில்லை. அதனால் இந்தப் பய ணத்தைத் தொடர்வோம் என்றேன். இப்போது நல்ல குழுவொன்று உருவாகியுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் என அனைவரும் ஒன்றிணைந்து முதலில் இந்த நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்கி னோம். அன்று நாட்டில் பெரும் அச்சம் நிலவியது. எம்.பி.க்கள் வீதியில் கொல்லப்பட்டால் நாட்டின் நிலை என்னவாகும்? அப்படிப்பட்ட நிலையை நாம் கடந்து வந்திருக்கின்றோம்.

நாட்டை வழமையான நிலைக்கு கொண்டு வரவும், வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கவும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் அந்தப் பணிகள் முடிந்துவிடவில்லை. சர்வ தேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி நாம் செயற்பட வேண்டும். அதை உடைத்தால் நாடு மீண்டும் படுகுழியில் விழும். அவர்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எமக்கு நிதி உதவிகளை வழங்குகின்றனர். நாமும் அதற்கு உடன் பட்டிருக்கின்றோம். அதற்கமைய பயணிக்க வேண்டும். டிசம்பர் வரையில் போதுமான பணம் மட்டுமே எம்மிடம் உள்ளது.

ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட வேண்டியுள்ளது. அதனால் ஜனவரி, பெப்ரவரிக்குள் அந்தப் பணம் கிடைத்து விடும். ஆனால், இது குறித்து புதிதாக ஆராய நீண்ட காலம் தேவைப்படும். அதன் பின்னர் இந்தப் பணிகளை நிறைவு செய்ய ஒரு வருடமாவது தேவைப்படும். பணம் இல்லாமல் நாம் முன்னேற முடியாது. எனவே, இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பணத்தைப் பெறுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும். நாட்டிலுள்ள இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அவர்களுக்குத் தொழில் வழங்க வேண்டும்.

வறுமையை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த நடவடிக்கைகளுக்காக நான் 9 மாகாண அரசுகள் மற்றும் மத் திய அரசு உள்ளடங்களாக 10 அரசுகளின் கீழ் உள்ள அனை வருக்கும் பொறுப்புகளை வழங்குவோம். பாரபட்சமின்றி நாட்டைப் புதிய கோணத்தில் முன்னோக்கிக் கொண்டு செல்லவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின் றேன். இந்தப் பயணத்தைத் தொடர்வோம். அனைவரும் இணைந்து முன்னேறுவோம். 2022 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பெரும்பான் மையானவர்கள் என்னை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர்.

அந்த ஆதரவு இல்லாவிட்டால் இன்று நாடு இந்த நிலையை அடைந்திருக்காது. எனவே, அந்தத் தீர்மானத்தை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுகின்றேன். அவரின் தீர்மானம் நாட்டைக் காப்பாற்றியது. கட்சிகளைப் பிளவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. முடிந்த வரையில் கட்சிகளைப் பாதுகாத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். மேடையில் இருந்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை. பொரு ளாதாரத்தைப் பாதுகாத்து முன்னேற வேண்டும்.

சர்வதேச ஒப்பந்தங்களை திரும்பப் பெற முடியாது. அதைப் பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் வந்தாலும் அது நமது கடமையாகும். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும். அந்தத் தேர்தலை 1988 முறைப்படி நடத்த எதிர்பார்க்கின்றோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here