தேசம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பவர்கள் மலையகத்தை மாத்திரம் பின்னோக்கி இழுப்பதா ? திலகர் கேள்வி

0
125

நாடு வங்குரோத்து இருந்து முன்னோக்கி கொண்டு சென்று இருக்கின்ற நிலையில் அதனை பின்னோக்கி இழுக்க வேண்டாம் கோரிக்கை வைத்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்கிறார்கள். அது நியாமான கருத்துதான் . ஆயினும் மலையக நிலையில் மாத்திரம் பின்னோக்கி இழுக்கின்ற நிலையே இவர்களிடத்தில் காணப்படுகிறது என நுவரெலியா மாவட்ட முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளராக்கு எனும் கவனயீர்ப்பு பேரணியின் நான்காவது நிகழ்வு (04.08.2024).ஞாயிற்றுக்கிழமை பொகவந்தலாவ பகுதியில் அமைந்துள்ள போராட்ட தியாகி பிரான்சிஸ் அய்யாவு அவர்களின் நினைவிடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கு” என்ற மக்கள் போராட்ட குரலை நாடு முழுவதும் எடுத்துச்சல்லும் விதமாக கவனயீர்ப்பு நிகழ்வுகளை மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்து வருகிறது. இதனை தேர்தல் கால கோஷமாகவன்றி மலையக மக்களின் காணி உரிமையின் அடிப்படைகளில் ஒன்றாக தேசிய ரீதியாக ஒள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்ப்பது எங்கள் நோக்கமாகும்.

தேசிய ரீதியாக தேசத்தை முன்னோக்கி கொண்டு செலல வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நிலையில் மலையகத் தை மாத்திரம் பின்னே இழுக்கும் நிலைமையே நடைமுறையில் உள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருக்க கூடியவர் மலையக மக்களின் வாக்குகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர் .

யாழ். மக்களுக்கு குடி நீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை செய்கிறார். அது வரவேற்கத்தக்கது. அதற்கு நாங்கள் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஆனால், இந்த பொறுப்பை வகிக்க கூடிய மலையக அமைச்சரினால் மலையக பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் சபை தனது சேவையை வழங்கவேண்டும் என குறைந்த பட்சம் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்ய முடிந்ததா? என்பது தான் எமது கேள்வி ? தோட்டங்கள் கிராமமாக மாறும் பட்சத்தில் குடிநீர் வசதிகள் கழிவகற்றல் வசதிகள் அரசினால் செய்யப்பட வேண்டும். அதற்கான எந்த விதமான ஏற்பாடுகளையும் தனது அமைச்சின் ஊடாகச் செய்யாமல் தோட்டங்களை கிராமம் ஆக்கப் போகிறோம் என வர்த்தமானி வெளியிடுவதால் மாத்திரம் அது சாத்இயமாகிவிடாது.

மலையக மக்களின் வாக்குகளை பெற்று மற்றைய பிரதேசங்களுக்கு சேவையினை வழங்க முன்வருகின்ற அதே நேரம் இங்கே வெறுமேன வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மாத்திரம் மலையக மக்களை ஏமாற்ற நினைப்பது அந்த மக்களை தொடர்சியாக வஞ்சிப்பதாகும்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் என நல்லாட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சை இல்லாமல் ஆக்கி மீண்டும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என பின்னே இழுத்து வைத்துள்ளார்கள்.

மறுபக்கம் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாமல் செய்து வர்த்தமானி மற்றும் சம்பள நிர்னய சபை ஊடாக அரசாங்கம் பொறுப்பு கூறும் வகையில் பிறஜைகளுக்கு உரிய அந்தஸ்த்தோடு அரசு சம்பளத்தை ஒழுங்கு வழங்குகின்ற முறையினை மாற்றியமைத்து மீண்டும் அடிமை கூட்டு ஒப்பந்தத்திற்கு இவர்கள் தயாராகுகிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரையில் கூட்டு ஒப்பந்தம் அவர்களுக்கு தேவையென தெளிவாக கூறுகிறார்கள். 1700ரூபாய் என வர்த்தமாணியில் அறிவித்துவிட்டு அதனை விட குறைந்த தொகைக்கு கூட்டு ஒப்பந்தத்தை செய்வது என்பது மலையகத்தை பின்னோக்கி இழுப்பதாகும்.

தோட்டங்களை கிராமங்களாக ஆக்குரோம் என்ற பெயரில் வர்த்தமானி வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தை விட்டு கிராமங்களாக மாற்றினால் அதற்கான பண்புகள் குறித்து எவ்வித உள்ளடக்கமும் பேசப்படுவதில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணி சிறுதோட்ட உரிமை சம்மதமாக கோரிக்கை வைத்தாலும் அதன் உள்ளடக்கம் என்ன அது எவ்வாறாக அமைய வேண்டும் தொடர்பான தெளிவில்லாமல் அவுடகுரோவர் முறையுடன் சிறுதோட்ட முறமையைக் குழப்பிக் கொண்டுள்ளனர்.

அவுட் குரோவர் முறை மீண்டும் இந்த மக்களை அடிமை நிலைக்கே இட்டுச் செல்லும். இன்னுமொரு ஒப்பந்தத்தின் ஊடாக மலையக மக்களை வஞ்சிக்க பார்க்கின்றனர்.

சிறு தோட்ட உடமைமை இந்த நாட்டில் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பது தொடர்பாக ஒரு நேர்த்தியான வரலாறு இருக்கிறது. தென்பகுதியில் நில உரித்துடன் கூடியவாறு சிருதோட்ட உரிமையாளராக ஆக்கப்பட்டு ள்ளார்களோ அதேபோல மலையக பெருந்தோட்ட மக்களும் நில உரிமையுடன் கூடிய சிறு தோட்ட உடமையாளர்கள் ஆக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here