விடைபெற்றார் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

0
235

சவால்களை ஏற்றுக்கொள்வது தனது வாழ்வில் புதிய விடயம் அல்ல எனவும் நாட்டுக்கு தேவையான போது அதனை தாம் செய்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலா அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டிற்காக சிறப்பாக சேவையாற்றி நாட்டுக்கு உதவிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையிலான அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுகளின் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், அவர்கள் முன்னிலையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here