ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்த விரும்புவதாக நாமல் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக சுமந்திரனிடம் நாமல் தெரிவித்தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட மாகாண பொறுப்பாளர் கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.