அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் கல்வியாண்டிற்கான இறுதி தினம் மற்றும் ஆரம்பிக்கும் தினம் ஆகியவற்றை, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை, 2024 ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
இதே வேளை, 2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்விப் பருவத்தின் முதல் கட்டம், 2024 ஆகஸ்ட் 26 திங்கள் அன்று ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )