1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி பிரித்தானியாவிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது.
புராதன தேசத்தின் கீர்த்திமிகு சுதந்திர தினவிழா இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் செங்கோட்டையில் இன்று நடைபெற்றது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி ராஜ்கோட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இந்திய இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் பாரதப்பிரதமர் செங்கோட்டைக்கு வருகை தந்தார்.
இதனையடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் தேசிய கொடியேற்றப்பட்டது.
நாட்டுக்காக இன்னுயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்த பிரதமர், உலகின் மாபெரும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் நீதித்துறையில் மாற்றம் தேவை எனவும் அந்த மாற்றங்களை தான் கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.