தாயிடம் இருந்து ஒருநாளும் விலகி செல்லமாட்டேன் – வேலு யோகராஜ்

0
170
எனது தாய் கட்சி,அரசியல் பாசறை,மற்றும் வேலு யோகராஜ் என்ற பெயரை சமூகத்திற்கு  விளங்கச் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விட்டு ஒருபோதும் விலகிச் செல்ல மாட்டேன்.
என நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில இணையத்தள சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டுள்ளது.
இதை கண்டித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நுவரெலியா இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட காரியாலயத்தில் (20) மதியம்  இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு விளக்கமளித்த வேலு யோகராஜ் மேலும் தெரிவித்ததாவது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரனில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க இ.தொ. கா தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்புக்கள் காங்கிரஸ் உயர் பீடத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நான் காங்கிரஸை விட்டு விலகிவிட்டேன் எனவும், ஜனாதிபதி தேர்தலில்  சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க போவதாகவும், அவர்களின் கட்சியில் இணைந்து விட்டதாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு எனது பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறாக  சமூக வலைத்தளங்களில் உள்ள சில இணையத்தள,ஊடகங்களில் என் மீது பிழையான கருத்தை தெரிவித்து செய்திகள் பரப்பப்படுகிறது இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அதேநேரத்தில் கடந்த காலத்தில் நாடு எதிர்நோக்கிய பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டில் அனைத்து மக்களையும் காப்பாற்ற முன் வந்த   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நுவரெலியா மாவட்ட மக்கள் முன்வந்து வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு எவருக்கும் ஆதரவு வழங்கவும் மாட்டேன். இ.தொ. காவை தவிர வேறு எந்த கட்சியுடனும் இணையவும் மாட்டேன். என உறுதியாக தெரிவித்த அவர் நீண்டகாலத்துக்கு பின் கடந்த (18) அன்று தன்னை இ.தொ.கா தேசிய சபைக்குள்ளும் உள்வாங்கி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here