உலகின் மிக நீளமான முத்திரையை வெளியிட்டுள்ள இலங்கை

0
131

கண்டி தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹெராவை அடையாளப்படுத்தும் வகையில் 205 மி.மீ நீளத்தில் வெளியிடப்பட்ட முத்திரை சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் கே.ரணசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தலாதா மாளிகையின் கலாசாரம் சார்ந்து அச்சிடப்பட்ட முத்திரை, நினைவுச் சின்னம்,தபால் தலை என்பனவற்றையும் மாளிகையின் அருங்காட்சிகத்தில் வைப்புச் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தலதா மாளிகையின் பெரஹெராவை மதம் சார்ந்த ஆசியாவின் உயர் நிகழ்வதக உலகின் முன்பாக அடையாளப்படுத்துவதற்கான அரசாங்க அனுசரணையை வழங்குவதாக உறுதியளித்தார்.

பெரஹெராவை ஏற்பாடுச் செய்தமைக்காக சகலருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அதனை தேசிய கலாசார நிகழ்வாக மாத்திரமின்றி, இலங்கையின் தனித்துவமான கலாச்சார அம்சமாக உலகிற்கு கொண்டுச் செல்வதோடு, அதனை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் கண்டி நகரத்தை கலாச்சார மத்திய நிலையமாக மாற்றி, பரந்த அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளியை எசல பெரஹெரா சிறப்பாக நிறைவுள்ளதாக அறிவிக்கும் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஊர்வலாமாக ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தலதா மாளிகை மற்றும் அண்மைய விகாரைகளின் தியவடன நிலமேக்களை ஜனாதிபதி வரவேற்றார்.

அதனையடுத்து தியவடன நிலமேயினால் பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பின்னர் சம்பிரதாய அடிப்படையில் ஜனாதிபதியுடன் தியவடன நிலமேக்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதன் பின்னர் பெரஹெராவில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி பரிசுகளை வழங்கி வைத்தார்.

அதேநேரம் இதுவரையில் தலதா மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதி நன்கொடையாக மில்லியன் ரூபாய் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மத்திய மாகாண சபையினால் வௌியிடப்பட்ட சிறப்பு சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதேபோல் எஹெலேபொல வலவு பகுதியை மாளிகைக்கு சாற்றுவதற்கான கொடுப்பனவு பத்திரமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தியவடன நிலமேயிடம் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here