அன்றைய ஜே.வி.பி பேய்கள்- இன்றும் மிருகங்களாக செயற்படுகின்றனர்

0
55
நமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கலவரங்களிலின் பின்னனியில் ஜே.வி.பி பேய்கள் மிருகத்தனமாக செயற்பட்டதை யாரும் மறந்துவிட கூடாது.
1970 ஆம் ஆண்டு காலம் தொட்டு 1989 ஆம் ஆண்டு காலப்பகுதி மட்டுமல்லாமல் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாட்டுக்கு எதிரான போராட்டங்களில் பின்னனியாக செயல்பட்டவர்கள் ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தியினர்.
என நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க சாடினார்.
நாட்டில் நடைபெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில்  சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும்   இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளருமான சுப்பையா சதாசிவம் தலைமையில் அதன் முதலாவது பிரச்சார கூட்டத்தை நுவரெலியா மாநகர சபை வாசிகசாலை மண்டபத்தில் (01.09.2024) மதியம் நடத்தியது.
 இதன்போது  உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.
இந்த நாட்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டின் அனைத்து தொழில் துறைகளிலும் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டது.
இதன் காரணமாக நாட்டு மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல முடியாது பாதிக்கப்பட்டனர். அதேபோல அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுபாடு,பொருளாதார  பாதிப்பு என பல வகையிலும் நாட்டு மக்கள் முகம் கொடுக்க நேரிட்டது.
இந்த சூழ்நிலையில் நாட்டில் அடுத்து வந்த பொருளாதார வீழ்ச்சி இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தேசிய மக்கள் சக்தி நாட்டின் அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சாதாரண போராட்டத்தை  அரகல எனும் நாமம் சூட்டி அப்போராட்டத்தை பெரிதாக்கியவர்களும் இவர்களே.
இந்த நிலையில் 1970-1989 காலம் வரை ஜே.வி.பினரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை போல அரகலை நேரத்திலும் வன்முறைகளை கையாண்டு  நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் வீட்டு சொத்துக்கள் பணம் நகையை கொள்ளையிட்ட்ட இவர்கள் 77 வீடுகளை எறித்து நாசமாக்கினார்கள்.
இதன்போது எனது வீட்டையும் எறிக்க ஒரு குழுவினர் வந்தார்கள் ஆனால் எனது வீட்டில் பத்து துப்பாக்கிகள் இருந்தது அவர்கள் ஓடிவிட்டார்கள் அவர்கள் மீறியிருந்தால் அவர்களை சுட்டுடிருப்பேன் என்றார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரம்,வெளிநாட்டு உதவிகளுக்கு பாதகம் விளைவித்த இவர்களால் நமது நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு  அரசியல் பிரச்சினையும் அரசு மாற்றமும் ஏற்பட்டது.
இதன்போது நாட்டை பொறுப்பேற்கும்படி சஜீத் பிரேமதாசவை அழைத்த போது நாட்டை பாரமேற்க்க அவர் பயந்தார்.அதேநேரத்தில் அனுரகுமார திஸாநாயக்கவை பாரமேற்க்க கேட்ட போது பாராளுமன்றத்தை கலைத்தால் நான் பாரமேற்க்க தயார் என ஒதுங்கி கொண்டார்.
நாம் பாராளுமன்றத்தை கலைத்திருந்தால் பங்களாதேசத்திற்கு ஏற்பட்ட நிலை அப்போது வந்திருக்கும். இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்து நாட்டை பாரம்மேற்று வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்தி கடந்த இரண்டு வருட காலத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி அபிவிருத்தி பாதையிலும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்கிறார்.
எனவே அனுபவம்,வெளிநாட்டு தொடர்பு,திறமை,மற்றும் ஆளுமை கொண்டவர் என்ற வகையில் மீண்டும் அவரை ஆட்சியில் அமரவைக்க முடிவெடுத்து 35 கட்சிகள் அவருடன் கைகோர்த்து இன்று நாம் செயற்படுகிறோம்.
இவரின் வெற்றியில் மாற்றமில்லை அதைபோல நாட்டு மக்களும் இவரை கைவிடப்போவதில்லை .அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் 60 % வழக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியும் ஈட்டுவதில் மாற்று கருத்தும் இல்லை என்றார்.
அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் அவரின் வெற்றியை உறுதி செய்வார்கள்.அதேபோல மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது போல தோட்டங்களை கிராமமயம் படுத்துவார் வீடுகளும் அமைத்து கொடுப்பார் என  தெரிவித்தார்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700/= ரூபாய் சம்பளம் பத்தாம் திகதி கிடைக்காது அது தொடர்பாக எதிர்வரும் செவ்வாய் கிழமை இறுதி பேச்சு இடம்பெறவுள்ளது.இதை தொடர்ந்து சம்பள நிர்ணைய சபை ஊடாக எதிர்வரும் (15) திகதி தொழிலாளர்களுக்கான மாதாந்த முற்பண கொடுப்பனவுடன் சம்பள உயர்வு  வழங்கப்படவுள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here