பலமணிநேரம் முயற்சித்தும் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியாத சிறுத்தை – நடந்தது என்ன?

0
182

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தில் சிறுத்தையொன்று வீட்டுத்தோட்ட பகுதியில் கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை லக்கம் பகுதியில் கம்பி வலையில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பல மணிநேரம் போராடிய சிறுத்தை உயிரிழந்துள்ளது.

சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினர் அது தொடர்பில் (01) காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியதன் பின்னர் அதிகாரி மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். மரக்கறி தோட்டத்திலிருந்து, மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தை சிக்கி தப்பிக்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தையை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைவுள்ளதாகவும், பின்னர் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here