“ரணிலை அறிந்து கொள்வோம்” முழுநாட்டையும் உள்ளடக்கும் வகையில்
எதிர்வரும் 7 ஆம்திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம்
சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலைஅறிந்துகொள்வோம்” எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில்நாளை (07) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
09மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளுராட்சி மன்றங்கள், 4,984 வட்டாரங்கள், 14,026 கி.உ. பிரிவுகள்மற்றும் 53,896 கிராமவீதிகளை உள்ளடக்கிய இந்தநிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூகமற்றும் கலாசாரரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை மக்களுக்கு அறிந்துகொள்ளவாய்ப்பளிக்கப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் அடங்கியதுண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதன்கீழ் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
மீண்டும்வரிசையில் நிற்கும்யுகத்தை எதிர்கொள்ளாத வகையில் பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்டநாட்டில் மக்களின் எதிர்பார்ப் புகளையும் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் கௌரவமாக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு
Ranil 2024- இயலும் இலங்கை