சஜித் பிரேமதாசவின் யாழ் . கூட்டத்தில் மேடையேறிய இலங்கை தமிழரசுக் கட்சி

0
111

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் (15) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் உத்தியோக பூர்வமாக மேடை ஏறியிருந்தனர். கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here