ஜனாதிபதி வேட்பாளரின் படம் மற்றும் தேர்தல் சின்னம் அடங்கிய தீப்பெட்டிகளை விநியோகித்த குழு ஒன்று நுவரெலியா பகுதியில் சிக்கியதாக பெவ்ரல’ அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.