பிரதமர் பதவியிலிருந்து விலகினார் தினேஸ் குணவர்த்தன.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 09ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி, 2024 செப்டம்பர் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 47(2) ஆ பிரிவிற்கமைய பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.