புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்

0
140
MARSHAL SAMPATH THUYACONTHA Defense Secretary JVP-NPP-2024

புதிய பாதுகாப்புச் செயலாளராக வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற இவர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக  விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துயகோந்தா 1988 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன் 1990 ஆம் ஆண்டு பொதுக் கடமைகளுக்கான பைலட் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டவர்.
2001 ஆம் ஆண்டில், NO-9 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவில், இலங்கை விமானப்படைத் தளமான ஹிங்குராங்கொடவில் இரண்டாவது கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
2005ற்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கை விடுவிப்பதற்கான போர் உள்ளடக்கிய அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாக பங்கேற்றார், மேலும் அவர் இலங்கை விமானப்படையின் செயல்பாடுகள்/விஐபி மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர் பைலட்டாக 7000க்கும் மேற்பட்ட பறக்கும் மணிநேரங்களை முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எயார் வைஸ் மார்ஷல் துயகோந்தா பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலான அவரது தனிப்பட்ட செயல்களுக்காக, அவர்
“வீர விக்கிரம விபூஷணயா” (WWV),
“ரண விக்கிரம பதக்கமா” (RWP)
“ரண சூர பதக்கமா” (RSP) ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இத் தேர்தலில் NPPக்கு பணியாற்றிய இவர் பாதுகாப்புப்பிரிவின் அனேக வாக்குகளை NPPக்கு கொண்டுவந்து சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here