தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

0
223

தபால் மூல விண்ணப்பங்களைச் ஜனாதிபதித் தேர்தலின் போது சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில்    நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலிலும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளதால், ஜனாதிபதித் தேர்தலின்போது தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங் களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் கடந்த முறை தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் அப்படியே செல்லுபடியாகும்.

2024 வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய ஒரு கோடியே 71 இலட்சத்து 4 ஆயிரத்து 354 வாக்காளர்கள்  வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here