மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 10 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல்

0
24

மட்டக்களப்பில் பாலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் (10) படையெடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றதுடன் இதுவரை 10 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக மட்டு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எம்.பி.எம். சுபீயான் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை வெள்ளிக்கிழமை பகல் 12 மணி இறுதிதினமாகும் இந்த நிலையில்   (10) மட்டக்களப்பு பழைய கச்சேரியிலுள்ள தேர்தல் வேட்பு மனு தாக்கல் காரியாலயத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் படையெடுத்துள்ளனர்

இதனையடுத்து கச்சேரியின் வாசலில் பொலிசார் வீதி மறியல் தடைகளை நிறுத்தி வாகனங்கள் அனைத்தும் நிறுத்;தப்பட்டு உள் செல்லவிடாது திருப்பி அனுப்பியதுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் பிரதம வேட்பாளருடன் 6 பேரை தவிர எவரையும் உள்நுழைய பொலிசார் அனுமதிக்கவில்லை

இதேவேளை இன்று இலங்கை தமிழரசு கட்சி, ஈபி.டி.பி, தேசிய மக்கள் கட்சிஇ, பிள்ளையபனின் ரி.எம்.வி.பி கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மற்றும் முன்னாள் பிரதி அமைச்சரும் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சில சயேட்சைக் குழுக்களை சார்ந்தவர்கள் வேட்பு மனதாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில் 5 பிரதி நிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக  2020 பாராளுமன்ற தேர்தலில் 16 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 304 பேர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here