தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையகப்படுத்துவதற்கான விதிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
12 முன்னாள் அமைச்சர்கள் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், வீடுகள் மீள ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் மின்சாரம் மற்றும் நீர் உட்பட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களும் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 உத்தியோகபூர்வ இல்லங்களில் இந்த 12 வீடுகள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.