அரச ஊழியர்களுக்கு குறைந்தப்பட்சம் 04 மணி நேரம் விடுமுறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தனியார் ஊழியர்களுக்கும் பொருந்தும். வாக்காளர் ஒருவர் 40 கிலோமீட்டருக்கு உட்பட்டவராக இருந்தால் அரை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கி.மீ. க்கு உட்பட்டவராக இருந்தால் ஒருநாள் விடுமுறையும், 100 முதல் 150 கி.மீ. வரை இருந்தால் ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கி.மீ. க்கு மேல் இருந்தால் தூரத்தின் பிரகாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.