தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
2024 பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவராக இவரது பெயர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.