தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா எதிர்வரும் 28 ஆம் தேதி வியாழக்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது . அவர்கள் அனைவருக்கும் அங்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கின்றனர் .
திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்து சிறப்பிக்க உள்ளார்.
மேற்படி விழா தொடர்பாக முன்னைய திகதியும் இடமும் மட்டுமே மாற்றமடைந்துள்ளன, ஏனைய நிகழ்வுகள் யாவும் முன்னர் திட்டமிடப்பட்டது போன்று நடைபெறும் என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.
சகல மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் அதற்காக நடவடிக்கை எடுக்குமாறும் மேலதிக விபரங்களுக்கு திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
( வி.ரி. சகாதேவராஜா)