வெலிகந்த பெலிஸ் பிரிவிலுள்ள நாமல்கம பிரதேசத்தில் புதையல்தோண்டி இரு இராணுவத்தினர் உட்பட 11 பேரை நேற்று சனிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதுடன் மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
பொல்ஹெங்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் வழங்கிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு குறித்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதியை பொலிசாருடன் இராணுவ பொலிசார் இணைந்து சுற்றிவளைத்தனர். இதன் போது இரு இராணுவத்தினர் உட்பட 11 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களில் பதுளையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போலி அடையாள அட்டை, இராணுவ சீருடைகள் மற்றும் பிரிகேடியர் அணிந்திருந்த ஆடை போன்றவற்றை கண்டுபிடித்ததுடன் யக்கல, பாதுக்க, கலேவெல, மில்லவ மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தை மீட்டதுடன் இதில் பிரிகேடியர் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் இராணுவத்துடன் தொடர்புடையவர் அல்ல என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
அதேவேளை கைது செய்யப்பட்ட இரு இராணுவத்தினரையும் திருகோணமலை ஹென்றிக் கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.சரவணன்)