மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகாரசபை க்குற்பட்ட அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து நகர தனியார் பஸ்தரிப்பிட காரியாலய பொறுப்பதிகாரியினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
மத்திய மாகாணத்தில் சிறப்பான சேவையை முன்னெடுத்து வரும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு உங்களது சேவைக்கு இடையூராக பஸ்தரிப்பிட காரியாலய உத்தியோகஸ்தர்கள் நேரசூசி பதிவு செய்யும் போதும், தற்காளிக சேவை அனுமதி பத்திரம் பெறும் போதும் லஞ்சம் வாங்குவதாக சமூக ஊடகங்களினூடாகவும் பொது மக்களின் ஊடாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே புதிய அரசின் லஞ்ச ஊழல் ஒழிப்பின் வேலைத்திட்டத்திற்கு பஸ் உரிமையாளர்கள் சாரதிகள் நடத்துனர்களின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கிறோம் எனவே லஞ்சம் வாங்குவது கொடுப்பதும் குற்றம் என்ற வகையில் தனியார் பஸ் தரிப்பிட காரியாலய உத்தியோகஸ்தர்களினால் லஞ்சம் கேற்கப்படுமானால் உடனடியாக எமக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்வதோடு இனி வரும் காலங்களில் இவ்வாறு லஞ்சம் வழங்குவோரின் போக்குவரத்து சேவைக்கான உரிமம் இரத்து செய்யப்படும் என மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகாரசபை தலைவர் கையொப்பமிட்ட கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.