கொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று அதிகாலை புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மழையுடனான சாலையின் வழுக்கும் நிலைமை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் இதயநோயாளி என்றும், பஸ் கவிழ்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் பஸ்ஸிலேயே உயிரிழந்ததாகவும் வாகனத்தின் சாரதி தெரிவித்துள்ளார்.
சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற கால நிலைமையே இவ்விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.