காரைதீவு பிரதான வீதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அள்ளுண்டு மாயமான அறுவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (28) வியாழக்கிழமை காலை இறுதியாக இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டன. நேற்று ஏனைய நான்கு சடலங்களும் மீட்கப்பட்டமை தெரிந்ததே.
நிந்தவூர் மதரஸா ஒன்றிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்களில் 06 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த சம்பவம் முழு தேசத்தையும் உலுக்கியிருந்தது.
இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.