காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்வடையும் சாத்தியம்

0
109

சீரற்ற வானிலையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய நகரங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மத்திய தரத்தில் காணப்படுகின்றது.

சாதாரணமாக காற்றின் தரம் 50 புள்ளிகளுக்கு குறைவாகக் காணப்பட வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனினும், யாழ். மாவட்டத்தில் காற்றின் தரம் 130 புள்ளிகளாகவும் கொழும்பு நகரில் காற்றின் தரம் 120 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையின் காரணமாக சுவாசக் கோளாறுகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here