பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான பதினாறு நாள் உலகலாவிய செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பை நல்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்சஜித் பிரேமதாஸா கலந்துகொண்டார்.
இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் குழாமில் அங்கம் வகிக்கும் பெண் ஊழியர்கள் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நீண்ட காலமாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வரும் அரசியல்வாதி என்ற வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இதன்போது தெரிவித்துள்ளார்.