பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை இலவசமாக வழங்கியது சீனா

0
58
The symbolic handover ceremony of school uniforms, donated by the Chinese government

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணி இன்று (10) உத்தியோகபூர்வமாக, சீனா அரசினால் இலவசமாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் அதிகாரிகள், சீனத் தூதுவர் சி ஜான் ஹோங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர்,

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுமார் 5.2 பில்லியன் ரூபா பெறுமதியான 11.28 மில்லியன் மீற்றர் துணிகள் பரிசாக வழங்கப்படும் என்றார்.

இந்த சீருடைகள் 10,096 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் வழங்கப்படும்.

கல்வி அமைச்சினால் 1992 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த சீருடைகள் வழங்கப்பட்டு வருவதுடன் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாடசாலை சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here