நாமல் எம்.பி அரசாங்கத்துக்கு விடுக்கும் சவால்

0
106

சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தனியாக நான் பரீட்சை எழுதினேன் என்றும் எனக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன என்று யாராவது நிரூபித்தால் நான் பாராளுமன்றம் வரமாட்டேன். ஆனால், அதனை நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றுக்கு வரக்கூடாது. அவரால் முடியுமா? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தனியாக தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டார் என்று கூறி அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க (17) சபையில் தெரிவித்திருந்தார். அதற்கு (18) பதிலளித்த நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here