காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கேசல்கமுவ ஒயாவில் சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூவர் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 24.12.2024.செவ்வாய்க்கிழமை 01மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு சட்ட விரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன் படுத்தப்பட்ட நீர் இறைக்கும் மோட்டர் மற்றும் எனைய உபகரணங்களையும் மீட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை, பொகவந்தலாவ. எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எஸ். சதீஸ்