ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய “சுனாமி 81 பேபி’ யும் அஞ்சலி செலுத்தினார்

0
50

கல்முனை பாண்டிருப்பில் சுனாமியின் போது கண்டெடுக்கப்பட்ட “சுனாமி 81 பேபி’ என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் மட்டக்களப்பு குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் ) வியாழக்கிழமை (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்துடன் சடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

2004ஆம் ஆண்டு கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியை அண்டிய பகுதியில் உள்ள வீட்டில் அபிலாஷ் இரண்டு மாத குழந்தையாக தாயாருடன் இருந்தபோது ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்டநிலையில் கடல் அலையால் அள்ளுண்டு அந்த பகுதியிலுள்ள காணி ஒன்றில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில் கூடை ஒன்றில் இருந்த நிலையில் அவரை வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றிவந்த தாதியர் ஒருவர் எடுத்துச் சென்று தனது பிள்ளை என சொந்தம் கொண்டாடினார்.

இந்த நிலையில் அபிலாஷ பொற்றேர் அது தனது குழந்தை என போரடிய சட்டத்தை நாடியதையடுத்து நீதிமன்றம் குழந்தையின் பெற்றோரை உறுதிபடுத்துவதற்காக இலங்கையில் முதல் முதலாக டி.என்.ஏ. பிசோதனை மூலம் 52 நாட்களின் பின்னர் அபிலாஷ் உண்மையான பெற்றோரை கண்டறிந்து அவர்களிடம் அபிலாஷ. ஒப்படைத்து இன்று 20 வருடம்.

சுனாமியால் உயிரிழந்த அனைவரது நினைவாக அபிலாஷ் வீட்டில் நினைவு தூபி ஒன்றை அமைத்து வருடாவருடம் நினைவேந்தலை நினைவு கூறிவருகின்ற நிலையில் சுனாமி 20 வருட நினைவதினத்தையிட்டு அபிலாஷ் அவரது தாய் தந்தை சகோதரியுடன் நினைவு தூபியில். சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

(கனகராசா சரவணன்;)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here