நுவரெலியா நீதவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதி மிக்க கைத்தொலைபேசியை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமறு நீதிமன்ற. நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பெறுமதியான தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், நுவரெலியா நீதவான் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோர்ட் கேஸ் கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேஸ் பொருளான பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் நுவரெலியா பொலிஸாரால் கடந்த (22) ஆம் திகதி வழக்கு அறையில் பெறுமதியான தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் நுவரெலியா
தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியின் பணிப்புரையின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சன மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் 75607 ரசிக ஆகியோர் தொலைபேசி தரவுகளை சரிபார்த்து காணாமல் போன தொலைபேசியை பயன்படுத்திய நபரை கண்டுபிடித்தனர்.
நீதிமன்ற களஞ்சியசாலையில் பணிபுரிந்த பெண் உத்தியோகஸ்த்தர் ஒருவரே குறித்த தொலைபேசியை காதலனுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தொலைபேசியைத் களவாடிய சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு (30) நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் மிஸ் பிரபுத்திகா லங்காங்கனி உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா – சுஹைல்