முன்னாள் ஜனாதிபதி -பிரதமருக்கு அழைப்பு

0
24

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரிடம்  வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காகவே குற்றப் புலனாய்வு திணைக்களம் அவர்களை அழைக்கவுள்ளது.

நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டுக்கு நிவர்த்தி செய்யும் வகையில், இந்திய கடன் திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சரவையில் யோசனை முன் வைத்திருந்தார்.

இதற்கமைய, தற்போது வெளிநாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

நாட்டுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here