தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று ‘சூரியன்’ வானொலியில் ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மலையகத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். அதற்காக மலையக அபிலாசை ஆவணத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனவே ,கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகி, அப்பணியை செய்ய எதிர்பார்க்கின்றேன். கூட்டணியில் தகுதியானவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைவராவார்.
மலையக அபிலாஷை ஆவணம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.