உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.
ஹங்கேரி நாட்டை சேர்ந்த103ஆவது வயதான அவருக்கு நியூமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள வைத்தியசாலையில் (02) அவரது உயிர் பிரிந்தது.
இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலில் குடியேறிய அவர் ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9இம் திகதி தனது 104ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.