துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானதாக வீடியோவொன்று வைரலாகி வருகிறது.
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் ’24ர் னுரடியi 2025′ கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பயிற்சி (07) துபாயில் நடைபெற்றது. அப்போது அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் வேகமாக ரேஸ் ட்ராக்கில் சென்ற போது பக்கவாட்டில் இருக்கும் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.
இதனால், கார் முன்பகுதி நொறுங்கிய நிலையில், அதிஷ்டவசமாக அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.